யாழ்ப்பாணத்தில் வியாபாரிகள் அமைதிவழி போராட்டம் ! காரணம் என்ன ?

0

யாழ்ப்பாணம் மாநகர மத்திய பேருந்து நிலையத்தைச் சூழ வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வியாபாரிகள், தமக்கு மாற்று இடம் வழங்கவேண்டும் என வலியுறுத்தி அமைதிவழி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாநகர சபை முன்றலில் இந்தப் போராட்டத்தை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாநகர மத்திய பேருந்து நிலையத்தை நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நவீன முறையில் மேம்படுத்தப்பட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதன் பணிகளை ஆரம்பிக்கவுள்ள நிலையில், பேருந்து நிலையத்தைச் சூழ பழக்கடைகள் உள்ளிட்ட வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்கும் 63 வியாபாரிகளை எதிர்வரும் 30ஆம் திகதியுடன் அந்தப் பகுதியிலிருந்து வெளியேறுமாறு யாழ்ப்பாணம் மாநகர சபை அறிவித்திருந்தது.

இந்த நிலையில் 63 வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கவனத்திலெடுத்து மாற்று இடத்தை ஒதுக்கித் தருமாறு கோரி வியாபாரிகள் அமைதிவழிப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

தமது கோரிக்கையை யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் நிறைவேற்றும்வரை தமது போராட்டம் தொடரும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.