யாழ். குரும்பசிட்டி முத்துமாரி அம்பாளுக்குப் புதிய சித்திரத்தேர் ! நாளை ஆரம்ப விழா

0

யாழ்.வலிகாமத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றான குரும்பசிட்டி முத்துமாரி அம்பாள் ஆலய புதிய சித்திரத்தேர் நிர்மாணிப்புக்கான ஆரம்ப விழா நாளை புதன்கிழமை(10) காலை-09.30 மணி முதல் முற்பகல்-11.30 மணி வரையுள்ள சுபநேரத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

யாழ்ப்பாணத்தின் முன்னணி ஸ்தபதிகளில் ஒருவரான ஸ்ரீகாளிகா சிற்பாலயத்தைச் சேர்ந்த செல்லையா பாலச்சந்திரன் குழுவினர் இவ்வாலய புதிய சித்திரத் தேருக்கான நிர்மாணப் பணிகளில் ஈடுபடவுள்ளனர்.

இதேவேளை, நாளைய தினம் இடம்பெறவுள்ள இவ்வாலயத்துக்கான புதிய சித்திரத்தேர் நிர்மாணிப்புக்கான ஆரம்ப விழாவில் அனைவரையும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு மேற்படி ஆலய பரிபாலன சபையினர் கேட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.