யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு மேலதிக பதவி !

0

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி த சத்தியமூர்த்தியை யாழ்.மாவட்டப் பிராந்தியசுகாதார சேவைகள் பணிப்பாளராக பதவியேற்குமாறு மத்திய சுகாதார அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.

தற்போதைய பதவிக்கு மேலதிகமாக குறித்த பதவியையும் ஏற்றுக் கொள்ளுமாறு வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

எனினும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் யாழ்.மாவட்டப் பிராந்தியசுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகிய இரு பதவிகளும் சற்றுக் கடினமான பணியென வைத்தியகலாநிதி த. சத்தியமூர்த்தி மத்திய அமைச்சு அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.