யூ டியூபில் 400 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ‘ரவுடி பேபி’ பாரிய சாதனை !

0

யூடியூப் தளத்தில் தற்போது ‘ரவுடி பேபி பாடல் 400 மில்லியன் அதாவது 40 கோடி பார்வைகளைப் பெற்று மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது.

அதேநேரம், பில்போர்ட் யூடியூப் இசைப் பட்டியலும் நான்காம் இடம் பிடித்த, முதல் தென்னிந்திய பாடல் என்ற சாதனை புரிந்துள்ளது.

இப்பாடலை பார்வையிட்ட ரசிகர்கள் நடன இயக்குநர் பிரபுதேவாவுக்கும் நடிகை சாய் பல்லவிக்கும் அதிகப் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

இதனால் சர்வதேச அளவில் இப்பாடலின் விடியோவுக்குக் கவனம் கிடைத்துள்ளது. கடந்த ஜனவரி மாதத்தின் போது தமிழ் சினிமாவில் முதல் 100 மில்லியன் பார்வைகளை கடந்த முதல் பாடல் என்ற சாதனையை சமீபத்தில் நிகழ்த்தியது.

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, டோவினோ தாமஸ், ரோபோ ஷங்கர், கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் ‘மாரி 2’ திரைப்படம் கடந்த ஆண்டு இறுதியில் வெளியானது.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படத்தில் ‘ரவுடி பேபி’ என்ற பாடல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து ‘ரவுடி பேபி’ பாடலின் வீடியோவை யூடியூப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் வெளியிட்டனர்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில், அதிகமானோர் பார்வையிட்ட பாடலாக ‘ரவுடி பேபி’ பாடல் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.