ரணில் தலைமையிலான அரசு தமிழ் மக்களை ஏமாற்றுகின்றது ! சி.பி.ரத்நாயக்க குற்றச்சாட்டு

0

பிரதமர் ரணில் தலைமையிலான அரசு தமிழ் மக்களை ஏமாற்றுவதாக நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற தழிழ் ஊடக மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “தமிழ் மக்களுக்கு கடந்த ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட விடயங்கள் தற்போதைய ஆட்சிக்காலத்தில் இடம்பெறுவதில்லை. தற்போதுள்ள தமிழ் அரசியல்வாதிகள் சுயநலவாதிகளாகவே உள்ளனர்.

கடந்த ஆட்சிக்காலத்தின்போது வடக்கின் வசந்தம் என்ற ஒரு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதன்போது வடக்கு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டன.

நிதியமைச்சரினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவு திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு கடனுதவிகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். இதன்மூலம் இளைஞர், யுவதிகளையும் கடன்காரர்களாக மாற்ற எண்ணியுள்ளனர்.

வடக்கில் உள்ள தமிழ் மாகாண சபை உறுப்பினர்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் வாகன அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அது வேறு மாகாணத்தவர்களுக்கு கொடுக்கப்படவில்லை.

அவரின் நோக்கம் வாக்குகளை பெற்றுக்கொள்வது மற்றுமே இந்த அரசாங்கம் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று அவர்களை ஏமாற்றுகிறது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.