விஜய்யின் தெறி படத்திற்கா இப்படியொரு நிலைமை? செய்தியை கேட்டு அப்செட் ஆன தளபதி ரசிகர்கள்

0

விஜய்யின் நடிப்பில் கடந்த 2016ல் வெளியாகியிருந்த படம் தெறி. இயக்குனர் அட்லீயுடன் விஜய் முதன்முதலாக இணைந்த படம்.

விஜய்காந்தின் சத்ரியன் படத்தின் காப்பி என கூறப்பட்டாலும் படம் வெளியிடப்பட்ட அனைத்து இடங்களிலும் மாபெரும் வெற்றி. இதன் காரணமாகவே விஜய் அட்லீக்கு இன்னொரு வாய்ப்பை கொடுத்தார்.

இந்நிலையில் தெறி படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய பல மாதங்களாகவே முயற்சிகள் நடைபெற்று வந்தன. மேலும் படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்தில் முன்னணி தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. அதன்பின்னர் அந்த வேடத்தில் ரவிதேஜாவை வைத்து தயாரிக்க திட்டமிட்டனர்.

ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவலின் படி படம் வெளியாகி 3 ஆண்டுகள் ஆகிவிட்டதால் ரீமேக் செய்வது சரியாக இருக்காது என்று படம் கைவிடப்பட்டுவிட்டதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த செய்தியை அறிந்த தெலுங்கு விஜய் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனராம்.

Leave A Reply

Your email address will not be published.