விருப்பு வாக்கு தேர்தல் முறைமைக்கு ஜே.வி.பி. கடும் எதிர்ப்பு !

0

விருப்பு வாக்கு முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தல் நடைபெறுவதற்கு ஜே.வி.பி. எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வரவு- செலவுத் திட்டம் மீதான இறுதி நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ”கட்சி என்ற ரீதியில் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்பதில்தான் நாம் உறுதியாக இருக்கிறோம்.

ஏனெனில், 2012- 2013 ஆம் ஆண்டுகளில் யுத்த வெற்றியைக் காரணம் காட்டியே மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டது.

எனவே, தற்போது புதிய உறுப்பினர்களை உள்வாங்குவதற்காகவே மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என நாம் வலியுறுத்தி வருகிறோம்.

அதேநேரம், மாகாணசபைத் தேர்தலுடன் பழைய முறையில் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகிறது. மாகாணசபை எல்லை நிர்ணய அறிக்கை தோற்கடித்தமைக்குக் காரணமே இதுவாகத்தான் இருக்கிறது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

மீண்டும் விருப்பு வாக்கு தேர்தல் முறைமையில் தேர்தல் நடைபெறக்கூடாது. பணக்காரர்கள் மட்டுமே வெற்றிப்பெரும் இந்த முறைமை இல்லாது செய்யப்பட வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.