பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சாய்பல்லவி, அந்த படத்திற்கு பின்னர் தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். சமீபத்தில் மாரி 2 படத்தில் நடித்து ரவுடி பேபி பாடலுக்கு தனுஷுடன் சேர்ந்து செம் ஆட்டம் போட்டிருந்த அந்த வீடியோ கூட இணையத்தில் படு வைரலாக பரவியது.
சாய் பல்லவி ப்ளஸ் என்றால் அவரது சிவந்த கண்ணம் தான். மேக்கப் போடாமலேயே கன்னம் இளஞ்சிவப்பாக இருப்பதும், சிரிக்கும்போது கன்னம், மேலும், சிவப்பாவதும் தான் அவருடைய அழகே, கன்னம் தானாக சிவப்பாவதற்குக் காரணம் ரோஸாஸியா ஒரு விநோதமான தோல் குறைபாடால் தான்.
தற்போது பிசியாக நடித்து வரும் சாய் பல்லவி எந்த ஒரு விளமபரத்திலும் இதுவரை நடித்தது இல்லை.
இந்த நிலையில் பிரபல அழகு சாதன நிறுவனம் ஒன்று பெண்கள் பூசும் பெர்னஸ் கிரீம் விளம்பரத்தில் சாய் பல்லவியை நடிக்க வைக்க அணுகியுள்ளனர்.
அந்த விளம்பரத்தில் நடிக்க 2 கோடி சம்பளமும் பேசியுள்ளனர். ஆனால், அந்த விளம்பரத்தில் நடிக்க சாய் பல்லவி மறுத்துள்ளார்.
இதற்கு முக்கிய காரணமே செயற்கையாக யாரையும் வெள்ளையாக்கிவிட முடியாது என்று சாய் பல்லவி நம்பினாராம் இதனால் செயற்கையான பொருட்களை மக்களிடத்தில் கொண்டு சென்று ஏமாற்றுவதில் சாய் பல்லவிக்கு துளியும் விருப்பம் இல்லை அவரது நெருங்கிய தோழி தெரிவித்துள்ளார்.
சாய்பல்லவியின் இந்த முடிவைக் கண்ட இணையவாசிகள் அவரை பாராட்டி வருகின்றனர்.