7 நாட்களுக்கு 7விதமான காரில் வந்த கவுண்டமணி, அந்த ஒரு அவமானத்தால் எடுத்த முடிவாம்!

0

கவுண்டமணி தமிழ் சினிமாவால் என்றும் மறக்க முடியாத காமெடி நடிகர். இவரும் செந்திலும் இணைந்தால் திரைப்படங்களில் காமெடி சரவெடியாக தான் இருக்கும்.

இந்நிலையில் ஒரு பத்திரிகையாளர் கவுண்டமணி குறித்து பேசுகையில், இவர் படப்பிடிப்பில் 7 நாட்கள் இருந்தால் ஒவ்வொரு நாளும் ஒரு புதிய காரில் வருவாராம்.

அதற்கு என்ன காரணம் என்றால், கவுண்டமணி ஆரம்பத்தில் நடிக்க வந்த போது, பெரிய நடிகர்கள் என்றால் நல்ல காரில் அனுப்புவார்களாம்.

இவரை எல்லாம் கூட்டத்தோடு கூட்டமாக ஒரு வண்டியில் ஏற்றி விடுவார்களாம், சில நாட்கள் கோபத்தில் வீட்டிற்கு நடந்தே வருவாராம்.

இதை பார்த்த ரஜினி ஒரு நாள் கவுண்டமணியுடன் அவரும் நடந்து வர, ஒரு நாள் பாருங்க நீங்க வாரத்திற்கு 7 விதமான காரில் படப்பிடிப்பிற்கு வருவீர்கள் என்றாராம், அவர் சொன்னது கவுண்டமணி விஷயத்தில் அப்படியே நடந்தது என பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.