DIG இருவருக்கு சேவைக்காலம் நீடிப்பு

0

மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவீ செனவிரத்ன ஆகியோருக்கு ஒரு வருட சேவைக் கால நீடிப்பு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நேற்று (09) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டீ.ஐ.ஜி. செனவிரத்னவுக்கு எதிர்வரும் 21 ஆம் திகதியும், டீ.ஐ.ஜி. விக்ரமசிங்கவுக்கு எதிர்வரும் 22 ஆம் திகதியும் குறித்த பதவிகளுக்கான காலம் நிறைவடையவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.