மற்றொரு முறை தனது மனைவிக்கு துரோகம் செய்ய முடியாத அளவுக்கு மறக்க முடியாத தண்டனையை தனது கணவனுக்கு அளித்துள்ளார் ஒரு மனைவி.
கொலம்பியாவில் ஹொட்டல் அறை ஒன்றில் வேறொரு பெண்ணுடன் கையும் களவுமாக சிக்கிய கணவன், தான் தவறு செய்து விட்டதாகவும், தன்னை மன்னிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
தான் கொடுக்கும் தண்டனையை ஏற்றுக் கொண்டால் அவரை மன்னிப்பதாக மனைவி கூற, அதற்கு ஒப்புக்கொண்டார் அவர்.
அவரது மனைவி கொடுத்த தண்டனை, நிர்வாணமாக தனது காரின் மீது கணவன் படுத்துக் கொள்ள, மனைவி ஊர் முழுவதும் காரை ஓட்டி வருவார் என்பதுதான்.
அப்படியே மனைவி தனது கணவனை கார் மீது நிர்வாணமாக படுக்க வைத்து காரை ஓட்டி வர, பார்ப்பவர்கள் எல்லாம் அவரை பார்த்து கேலி செய்து சிரித்ததோடு அவரை வீடியோவும் எடுக்க, தன் கையிலிருந்த டவலில் முகத்தை புதைத்துக் கொண்டார் அவர்.
இதற்கிடையில் கூட்டம் அதிகரிக்க, போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அறிந்த பொலிசார், சட்டம் ஒழுங்கைக் குலைத்ததாக அந்த கணவனை கைது செய்துள்ளனர்.

