மனைவி தற்கொலை! காதலன் என்கவுண்டர் ! இணையத்தில் லீக் ஆன ஆபாச வீடியோவால் ஏற்பட்ட விபரீதம்!

0

இணையத்தில் தனது ஆபாச வீடியோக்கள் வெளியானதால் மனமுடைந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார் இளம்பெண் ஒருவர்.

உத்திரபிரதேசம் மாநிலம் முசாபர்நகரில் இளம்பெண் ஒருவர் கால்வாயில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டார். இது குறித்து விசாரணையை துவங்கிய போலீஸாருக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.

திருமணத்திற்கு முன்னர் அந்த பெண் சுபம் குமார் என்பவரை காதலித்துள்ளார். காதலித்த போது இருவரும் மிகவும் நெருக்கமாக பழகியுள்ளனர். இந்த வீடியோ, புகைப்படங்கள் அனைத்தும் சுபம் குமாரின் போனில் இருந்துள்ளது.

இந்நிலையில் சுபம் குமார் தனது போனை அனுஜ்குமார் என்பவனுக்கு விற்று விட்டான். அதில் இருந்த புகைப்படங்களை சுபம் குமார் டெலிட் செய்யாததால் கேலரியில் இருந்த ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை அனுஜ்குமார் இணையதளத்தில் பதிவேற்றினான்.

இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி, அந்த பெண்ணின் கணவரின் கண்ணுக்கும் பட்டுள்ளது. இதனால் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அந்த பெண் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

தனது காதலியின் படங்களை இணையத்தில் பதிவேற்றியதால் சுபம் குமார் அனுஜ்குமாரை கொலை செய்துள்ளார். இது எல்லாம் போலீஸ் விசாரணையில் தெரியவர சுபம் குமாரை போலீஸார் கைது செய்ய சென்ற போது அவர் துப்பாக்கி வைத்து போலீஸாரை சுட்டதால் என்கவுண்டர் செய்யப்பட்டான். இந்த விவகாரம் உத்திரபிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.