அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்! ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும்!!

0

கிழக்கு மாகாணத்தின் இன்றைய ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் இலங்கை அரசாங்கத்தின் இன்றைய அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆகியோருக்கு எதிரான போராட்டங்களும் எதிர்ப்பும் இலங்கையில் வலுத்து வருகின்றது.

பிரபலமான சிங்கள பௌத்த பிக்கு வானத்துள் இரத்தின தேரர் கண்டியில் மாபெரும் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இவர் ஆரம்பித்த உண்ணாவிரத போராட்டத்திற்கு சிங்கள மக்கள் பெரும் ஆதரவினை வழங்கி வருகின்றார்கள்.

ஹிஸ்புல்லா, ரிசாத் பதியுதீன், அசாத் சாலி போன்றவர்கள் இஸ்லாமிய – முஸ்லீம் அடிப்படைவாதத்தை இலங்கையில் வளர்த்து வருவதாகவும் இலங்கையை ஒரு அராபிய தேசமாக கட்டமைக்க முயற்சிப்பதாகவும் இவர், குற்றம் சுமத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

இவர்கள் தமது ஆளுநர் பதவி மற்றும் அமைச்சுப் பதவிகளில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என்றும் இது தொடர்பில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் விரைந்து முடிவினை எடுக்க வேண்டும் என்றும் இரத்தின தேரர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை இன்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரர் அத்துலிய இரத்தின தேரரை சந்தித்துள்ளார். அத்துடன் இலங்கை அரசாங்கத்திற்கு 24 மணி நேர கால அவகாசத்தையும் அவர் வழங்கியுள்ளார் 24 மணி நேரத்துக்குள் இவர்கள் பதவி விலகாவிட்டால் நாட்டில் பாரிய விளைவுகளை உருவாக்கும் என்றும் ஞானசார தேரர் எச்சரிக்கை செய்துள்ளார்.

2009இல் முள்ளிவாய்க்கால் போர் நடந்த சமயத்தில் சிங்களப் பேரினவாத அரசுடன் இணைந்து கொண்டு தமிழர்களைக் கொன்று அழிக்கப்பட்டபோது பாற்சோறு உண்டு மகிழ்ந்தவர்களுக்கு இன்று அதே சிங்கள தரப்பினால் மாபெரும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் தலைவர்களுக்கு எதிராக மாபெரும் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

சிங்களப் பேரினவாத அரசு பொறுத்தவரை தமிழின அழிப்புக்கு ஆதரவாக முஸ்லிம்களை பயன்படுத்தி விட்டு பின்னர் அவர்களுக்கு எதிராகவும் வன்முறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருந்தன. இந்த நிலையில் தமிழ் மக்களை அழித்தொழிப்பதில் ஒத்துழைப்புகளை வழங்கிய முஸ்லிம்கள் இன்று அனாதரவாக மட்டுமல்ல அழிவின் விளிம்புக்குச் சென்று உள்ளனர்.

தாம் செய்த வினையின் பலனை இப்போது அவர்கள் அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர். அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்பது இலங்கை முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளின் விடயத்தில் உண்மையாகியுள்ளது.

ஐஎஸ் பயங்கரவாதிகளின் தாக்குதலை தொடர்ந்து இலங்கை முஸ்லிம் தலைவர்களுக்கு எதிரான இந்தப் போராட்டங்களும் எதிர் அரசியல் அழுத்தங்களும் அவர்களினுடைய அரசியலை கேளவிக்குறியாக்கியுள்ளது. முஸ்லிம் மக்களுக்கு பாரிய ஆபத்தையும் பிறப்பையும் சோதனை காலத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழர்களை பொறுத்தவரை இதனை பார்த்து மகிழ்ச்சி அடையப் போவதில்லை. ஆனால் இவைகளை சுட்டிக்காட்ட வேண்டிய தேவை ஒன்று உள்ளது. இனியாவது முஸ்லிம்களும் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகளும் பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் தலைவர்கள் முஸ்லீம் பிரதிநிதிகளுக்கு எதிராக ஒரு வார்த்தைகூடக் கூறவில்லை. நிதானமாகவே பேசி வருகின்றனர்.

வடக்கையும் கிழக்கையும் இணைத்தால் இரத்த ஆறு பாயும் என்று ஹிஸ்புல்லா கூறியிருந்தார். தமிழர்களுக்கு எதிரான பகிரங்கமான அவருடைய இந்த எச்சரிக்கை மாத்திரமல்ல கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பில் திருகோணமலையில் தமிழ் மக்களுக்கு எதிராக அவர் மேற்கொண்ட பல்வேறு அடாவடிகள் குறித்த ஆதாரங்கள் இணையம் எங்கும் வெளியாகியுள்ளன.

வடக்கில் ரிசாத் செய்த அட்டகாசம் கொஞ்சநஞ்சமல்ல. தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமித்து முஸ்லீம்களை குடியேற்றி தனது வாக்கு வங்கியை உருவாக்கியவர். தமிழ் மக்களுக்கு எதிரான பல்வேறு அழிப்பு ஆக்கிரமிப்பு செயல்களுக்கு மகிந்தவுக்கு துணை நின்றவர். வடக்கில் ரிசாத்தும், கிழக்கில் ஹிஸ்புல்லாவும் செய்த வினைகளையே இப்போது அறுவடை செய்கின்றனர்.

24 மணி நேரத்துக்குள் பதவி விலகாவிட்டால் பாரிய விளைவுகள் ஏற்படும் என்று ஞானசார தேரர் எச்சரிப்பு எச்சரித்து சாதாரண விடயமல்ல. அதே ஹிஸ்புல்லாவின் பணிதான் இதுவும்.

ஹிஸ்புல்லா வடகிழக்கு நினைத்தால் இதைத் ஆறு பாயும் என்று என்று சொல்லியிருந்தார். வடகிழக்கு இணைக்கப்பட்டு அதற்கு முஸ்லிம் மக்களின் அவர்களின் பிரதிநிதிகளின் ஆதரவு கிடைத்திருந்தால் அவர்களுக்கான பாதுகாப்பு இன்னும் அதிகரித்திருக்கும். நிலையில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான இந்த சூழ்ச்சிக்கு முஸ்லிம் மக்களுக்கு எதிரான இந்த அரசியலுக்கு காரணமானவர்கள் சிங்களப் பேரினவாதிகளும் சிங்கள தலைவர்களுமல்ல. முஸ்லீம் தலைவர்களை அவர்களே இதற்கு காரணம். அவர்களின் அழிவுக்கு காரணமானவர்கள்.

ஆசிரியர், ஈழம்நியூஸ், 02.06.2019

Leave A Reply

Your email address will not be published.