அதிக விக்கெட்டை கைப்பற்றி முதலிடம் பிடித்தார் மலிங்க

0

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப் பந்து வீச்சாளர் லசித் மலிங்க சர்வதேச இருபதுக்கு – 20 கிரிக்கெட் அரங்கில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றி சாதனை புரிந்துள்ளார்.

நியூஸிலாந்து அணிக்கு எதிராக கண்டி பல்லேகல மைதானத்தில் தற்போது இடம்பெற்று முடிந்த முதலாவது இருபதுக்கு – 20 கிரிக்கெட் போட்டியிலேயே அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

97 விக்கெட்டுக்களை மாத்திரம் இதுவரை பெற்றிருந்த மலிங்க நேற்றைய ஆட்டத்தில் கொலின் முன்ரோ மற்றும் கிரேண்ட்ஹோம் ஆகியோரை ஆட்டமிழக்க வைத்தே அவர் இந்த சாதனையை புரிந்துள்ளார்.

சர்வதேச இருபதுக்கு – 20 போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை கைப்பற்றிய வீரர் என்ற பட்டியலில் லசித் மலிங்க 99 விக்கெட்டுக்களுடன் முதல் இடத்திலும், பாகிஸ்தான் அணியின் ஸஹித் அப்ரிடி 98 விக்கெட்டுடன் இரண்டாவது இடத்திலும், பங்களாதேஷ் அணியின் சஹிப் அல்ஹசன் 88 விக்கெட்டுடன் மூன்றாவது இடத்திலும், பாகிஸ்தானின் உமார் குல் 85 விக்கெட்டுடன் நான்காவது இடத்திலும், சஹிட் அஜ்மல் 85 விக்கெட்டுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.