அந்த ஹீரோன்னா நான் சும்மாவே நடிப்பேன்: வில்லங்கமாக சிரிக்கும் நடிகை

0

நடிகை ஒருவர் தெரிவித்துள்ளது குறித்து தான் கோலிவுட்டில் ஆளாளுக்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த ஹீரோன்னா நான் சும்மாவே நடிப்பேன்: வில்லங்கமாக சிரிக்கும் நடிகைபார்க்க பக்கத்து வீட்டு பெண் போன்று இருப்பவர் அந்த நடிகை. எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் சிறப்பாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டுகளை பெற்றுவிடுவார்.

அவருக்கும் திறமையான ஹீரோ ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு நாளும், பொழுதுமாக வளர்ந்து கொண்டே இருக்கிறதாம். அந்த ஹீரோ எந்த நடிகையுடனும் அந்த அளவுக்கு நட்பாகிவிட மாட்டார். இந்நிலையில் இந்த நடிகையுடன் மட்டும் இப்படி நட்பை வளர்ப்பது தான் கோடம்பாக்கத்தினரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த ஹீரோவுடன் சேர்ந்து நடித்த நடிகை மீண்டும் அவருடன் பணியாற்ற விரும்புகிறாராம். அந்த நடிகருடன் மீண்டும் நடிப்பது என்றால் சம்பளமே வாங்காமல் சும்மா நடிப்பேன் என்று கூறி நடிகை ஒரு சிரிப்பு சிரித்துள்ளார்.

அவர் கூறியதை விட அவர் சிரித்த, சிரிப்புக்கு என்ன அர்த்தம் என்பதை தெரிந்து கொள்ளத் தான் பலரும் துடிக்கிறார்கள். கிசுகிசுக்களில் சிக்காமல் இருக்கும் நடிகரை பற்றி இப்படி ஒரு பேச்சு கிளம்ப நடிகை காரணம் ஆகிவிட்டார்.

முன்னதாக நடிகை வேறு ஒரு ஹீரோவுடன் நெருங்கிய நட்பில் இருந்தார். மேலும் நடிகையின் பெயர் திருமணமான வேறு ஒரு நடிகருடனும் சேர்ந்து அடிபட்டுக் கொண்டிருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.