இலங்கைக்கு எதிரான தொடரை நியூஸிலாந்து கைப்பற்றியது!

0

இலங்கைக்கு எதிரான இரண்டாவது சர்வதேச இருபதுக்கு -20 கிரிக்கெட் போட்டியில் 4 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்ற நியூஸிலாந்து தொடரை கைப்பற்றியுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு – 20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் நியூஸிலாந்து அணி 5 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்றுள்ள நிலையில், இரண்டாவது போட்டி இன்றைய தினம் இரவு 7.00 மணிக்கு கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 161 ஓட்டங்களை பெற்றது.

162 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த நியூஸிலாந்து அணி 19.4 ஓவரில் 6 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 165 ஓட்டங்களை பெற்று வெற்றியிலக்கை கடந்தது.

நியூஸிலாந்து அணி சார்பில் கொலின் முன்ரோ 13 ஓட்டத்துடனும், டிம் சைபெர்ட் 15 ஓட்டத்துடனும், ஸ்கொட் கேகிலாஜன் 8 ஓட்டத்துடனும், கிரேண்ட்ஹோம் 59 ஓட்டத்துடனும், டோம் புரூஸ் 53 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன் மிட்செல் சாண்டனர் 10 ஓட்டத்துடனும், டிம் சவுதி எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இறுதி ஓவருக்கு நியூஸிலாந்து அணிக்கு 7 ஓட்டங்கள் தேவை என்ற நிலையிலிருந்தபோது அந்த ஓவருக்காக பந்துப் பரிமாற்றம் மேற்கொண்ட வணிந்து அஷரங்க முதல் பந்தில் டோம் புரூஸை ரன் அவுட் ஆக்கியதுடன், இரணடாவது பந்தில் டார்லி மிட்செலை ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிக்க செய்தார்.

இதனால் 4 பந்துகளுக்கு 7 இருப்பினும் மூன்றாவது பந்தில் மிட்செல் சாண்டனர் ஒரு நான்கு ஓட்டத்தை விளாசித் தள்ள 3 பந்துகளுக்கு ஒரு ஓட்டம் என்ற நிலையிருந்தது. இறுதியாக நியூஸிலாந்து அணி 19.4 ஆவது ஓவரில் வெற்றியிலக்கை கடந்தது.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் அகில தனஞ்சய 3 விக்கெட்டுக்களையும், இசுறு மற்றும் வர்ணிந்து அஷரங்க ஆகியோர் ஒவ்வொரு விக்கெட்டினையும் உதான ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு : 20 தொடரை நியூஸிலாந்து அணி 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.