காஷ்மீர் பிரச்சினையில் மீண்டும் தலையிட விரும்பும் டிரம்ப் – காரணம் இது தான்!

0

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்தது.

காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க பாகிஸ்தான் அரசு முயற்சி மேற்கொண்டது. சீன உதவியுடன் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வந்த இந்த விவகாரம் தோல்வியில் முடிந்தது.

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானை ஆதரிக்க பெரும்பாலான நாடுகள் மறுத்து விட்டன.

இது பாகிஸ்தானுக்கு பின்னடைவாகும். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிடமும் இந்த பிரச்சினை கொண்டு செல்லப்பட்டது.

இது தொடர்பாக பிரதமர் மோடி பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான் ஆகியோரிடம் அவர் போனில் பேசினார்.

காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய தயார் என்று டிரம்ப் 2 முறை அறிவித்தார். இதை இந்தியா நிராகரித்தது. இந்தியாவின் உள் விவகாரத்தில் 3-வது நாடு தலையிடுவதை விரும்பவில்லை என்று தெரிவித்தது.

இந்த நிலையில் காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு உதவ தயார் என்றும், மத்தியஸ்தம் செய்ய மாட்டேன் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் அறிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெள்ளை மாளிகையில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து தொடர்பாக இந்தியா-பாகிஸ்தான் இடையே சற்று பதட்டமும், பரபரப்பும் இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலை இல்லை. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு இருந்த பதட்டம் தற்போது இல்லை.

என்னை பொறுத்தவரை இரு நாடுகளுடன் நான் நட்புறவில்தான் இருக்கிறேன். இரு நாடுகளும் விரும்பினால் காஷ்மீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு உதவ நான் தயாராக இருக்கிறேன்.

ஆனால் இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யவோ, தலையிடவோ விரும்பவில்லை.

இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.