தாக்குதல் திட்டம் பற்றி எதுவும் எனக்கு கூறப்படவில்லை – ஜனாதிபதி சாட்சியம்!

0

பயங்கரவாதி சஹ்ரானிடம் இவ்வாறான ஒரு தாக்குதல் திட்டம் இருப்பது தெரிந்தும் பொலிஸ் மா அதிபரோ பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவோ தன்னிடம் எதனையும் தெரிவிக்கவில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அனாவசியமான விடயங்கள் குறித்து தன்னிடம் பேசிய நபர்கள் அவசியமான விடயத்தை மறைத்துள்ளனர் எனவும் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

நேற்று காலை 10.00 மணி முதல் 2 மணி நேரம் ஜனாதிபதி செயலகத்தில் தெரிவுக்குழு தமது விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

தெரிவுக்குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி மற்றும் உறுப்பினர்கள் ஊடகங்கள் இல்லாது இந்த வாக்குமூலத்தை பெற்றுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.