நயன்தாரா சம்பளம் இவ்வளவா? அதிர்ச்சியடைந்த திரையுலகம்!

0

சிரஞ்சீவி நடிப்பில் உருவாகி வரும் பிரமாண்ட வரலாற்று படத்தில் தென்னிந்திய நடிகைகளிலேயே நயன்தாரா அதிக சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sye Raa Narasimha Reddy: நயன்தாரா சம்பளம் இவ்வளவா? அதிர்ச்சியடைந்த திரையுலகம்!’ஐயா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நயன்தாரா. சந்திரமுகி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தார். பத்தாண்டுகளைக் கடந்தும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் லேடி சூப்பர்ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார். முன்னணி ஹீரோக்கள் நயன்தாரா தங்கள் படத்தில் நடிப்பதை கௌரவமாகவே கருதி வருகிறார்கள்.

தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் அதிக பொருட்செலவில், பிரமாண்டமாக தயாராகும் வரலாற்றுப் படம் ‘சைரா நரசிம்ம ரெட்டி‘ . இப்படத்தில் அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி, ராணா முதலான பெரும் பிரபலங்கள் இணைந்துநடிக்கின்றனர். இப்படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கு நயன்தாரா 6 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார்.

முன்னதாக இவர் 5 கோடி ரூபாய் சம்பளமாக பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்திற்கு மேலும் ஒரு கோடி அதிகமாக 6 கோடி ரூபாய் வாங்கியுள்ளார். இது தென்னிந்திய நடிகை ஒருவர் வாங்கும் அதிகபட்ச சம்பளம் எனப் பேசப்பட்டு வருகிறது.

தற்போது நயன்தாரா தளபதி விஜய் நடிப்பில் ‘பிகில்‘ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் வேலைகள் நடந்து வர, தீபாவளிக்கு படம்வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ‘தர்பார்‘ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இவர் தற்போது ஒரு திரில்லர் படத்தில் தனி ஹீரோயினாக நடிக்கப் போகிறார். ‘அவள்’ படத்தின் இயக்குனர் மிலிந்த் ராவ் இந்தப்படத்தினை இயக்க உள்ளார். இப்படத்தில் நாய்க்கு முக்கியத்துவம் வாய்ந்த வகையில் திரைக்கதை அமைத்துள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

நயன்தாராவின் காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவன் இப்படத்தை தயாரிக்கிறார். செப்டம்பர் மாதம் இறுதியில் அல்லது அக்டோபர் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படும்என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.