முன்னாள் மத்திய அமைச்சர் & உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி காலமானார்!

0

முன்னாள் மத்திய அமைச்சர் & உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி காலமானார்

ராம் ஜெத்மலானி

வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசில் சட்டத்துறை அமைச்சராக பதவி வகித்தவரும், உச்ச நீதிமன்ற வழக்கறிஞராகவும் இருந்தவரான ராம் ஜெத்மலானி இன்று காலமானார்.

1923-ம் ஆண்டு அப்போதைய ஒருங்கிணைந்த இந்தியாவில் இருந்த சிந்த் பகுதியில் (தற்போது பாகிஸ்தான்) பிறந்த ராம் ஜெத்மலானி, 18 வயதிலேயே சட்டப்படிப்பு முடித்து அங்கு வழக்கறிஞராக பணியாற்றினார். பிரிவினைக்குப் பின்னர் இந்தியா வந்த அவர், டெல்லி மற்றும் மும்பை நீதிமன்றங்களில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பணியைத் தொடங்கிய ராம் ஜெத்மலானி, பாஜகவில் இணைந்து இரண்டு முறை, மக்களவை உறுப்பினராக தேர்வானார். வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் சட்டம் மற்றும் நீதித்துறை, நகர்ப்புற வளர்ச்சித்துறை ஆகிய துறைகளை கவனித்துக்கொண்டார்.

பின்னர், கட்சியில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, 2004-ம் ஆண்டு தேர்தலில் வாஜ்பாயை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்து அரசியலில் இருந்து விலகி, வழக்கறிஞர் பணியை தொடர்ந்து செய்தார். பல முக்கிய வழக்குகளில் ராம் ஜெத்மலானி வாதிட்டுள்ளார். இந்தியாவில் அதிக ஊதியம் வாங்கும் வழக்கறிஞர்களில் ராம் ஜெத்மலானியும் ஒருவர்.

ராஜிவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாதாடினார். 2 ஜி வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாதாடினார். 2010-ம் ஆண்டு மீண்டும் அவர் பாஜகவுக்கு திரும்பி, மாநிலங்களவை எம்.பி. ஆனார். பாஜகவில் மோடி தலைமைக்கு வந்ததும், கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியே இருந்த அவர், சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் வழக்கறிஞர் பணியிலும் ஈடுபடாமல் ஓய்வில் இருந்தார்.

95 வயதான ராம் ஜெத்மலானி இன்று காலை தனது வீட்டில் வயோதிகம் காரணமாக காலமானார்.

Leave A Reply

Your email address will not be published.