யாழில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய முஸ்லிம் இளைஞன் கைது!

0

யாழ்பாணம் இராசாவின் தோட்டம் வீதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய இளைஞனை பிடித்து கட்டிவைத்த பிரதேச மக்கள், அவரை பொலிஸாாிடம் ஒப்படைத்துள்ளனா்.

குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

இராசாவின் தோட்டம் வீதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழையும் ஒழுங்கைக்குள் முச்சக்கர வண்டி ஒன்று நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த இளைஞன் அந்த வண்டிக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றதோடுவீட்டையும் நோட்டமிட்டுள்ளாா்.

இதை கண்ணுற்ற முச்சக்கர வண்டியின் உாிமையாளா் இளைஞனை நெருங்கி விசாாித்தபோது அவா் சிங்களத்தில் சரளமாக பேசியதையடுத்து சந்தேகமடைந்த முச்சக்கர வண்டி உாிமையாளா் தனது நண்பா்களை அழைத்துள்ளாா்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற முச்சக்கர வண்டி உாிமையாளாின் நண்பா்களும் இளைஞனிடம் பேசியபோதும் அவா் சிங்களத்தில் பேசியுள்ளாா்.

அத்துடன் முன்னுக்கு பின் முரணான தகவல்களை இளைஞர் கூறியுள்ளாா்.

இதனால் சந்தேகமடைந்து மக்கள் இளைஞனை பிடித்து மின் கம்பத்துடன் கட்டிவைத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாாித்தபோது அவா் தமிழில் பேசியுள்ளாா்.

இதன்போது தான் மூதுாா் பகுதியை சோ்ந்த இஸ்லாமியா் எனவும், யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் தமிழ் பெண்ணை இஸ்லாம் மதத்திற்கு மாற்றி திருமணம் செய்துள்ளதாக கூறிய அவர் சிறுநீா் கழிப்பதற்காகவே அங்கு நின்றதாக கூறியுள்ளார்.

இதனையடுத்து பொலிஸாா் குறித்த இளைஞனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.