ரஷியாவில் ஐந்தே நிமிடத்தில் கடையை காலியாக்கிய பெண்கள் – காரணம் இது தான்!

0

ரஷியா நாட்டின் விளாடிகவ்கஸ் என்ற நகரில் அமைந்துள்ள ஷாப்பிங் சென்டரில் ஸ்டோலிஸ்டா என்ற துணிக்கடை செயல்பட்டு வருகிறது.

இந்த கடை வாடிக்கையாளர்களை கவர அதிரடி சலுகை ஒன்றை வெளியிட்டது. அதன்படி, இந்திய மதிப்பில் ஒரு ரூபாய் என்ற விலையில் துணிகள் விற்கப்படும் என அறிவித்தது. இந்த அறிவிப்பைக் கண்டதும் பெண்கள் கூட்டம் அந்த கடையின் முன் திரண்டது.

கடை திறந்த மறுவினாடியே கடைக்குள் பெண்கள் திபுதிபுவென உள்ளே நுழைந்தனர். அவர்கள் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த துணிகளை தங்கள் கைகளில் அள்ளிக் கொண்டனர்.

ஒரே துணிக்கும், பிறர் கையில் வைத்திருக்கும் துணியைப் பறிக்கவும் நடந்த போட்டியில் சிறிது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கடை திறக்கப்பட்ட ஐந்தே நிமிடத்தில் அங்கிருந்த துணிகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்தன.

தொடர்ந்து, இதுபோன்ற அதிரடி சலுகையை விரைவில் அறிவிக்க உள்ளோம் என கடை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடைக்குள் நுழைந்து பெண்கள் துணிகளை எடுக்கும்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளு காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave A Reply

Your email address will not be published.