லண்டனில் இசை நிகழ்ச்சி, ஸ்ருதி ஹாசன் நெகிழ்ச்சி!

0

தமிழின் முன்னணி நடிகையாக விளங்கும் நடிகை ஸ்ருதி ஹாசன் நேற்று லண்டனில் ரசிகர்களிடையே இசை நிகழ்ச்சி நடத்தினார்.

தொடர்ச்சியாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் முன்னனி ஹிரோக்களுடன் ஜோடியாக நடித்தார். இவர் சினிமாவில் ஹிரோயினாக அறிமுகமாகும் முன்பிருந்த இசை ஆல்பங்கள் வேலை செய்து வந்தார். இசை மீது அதிக ஆர்வம் கொண்ட அவர், கமலஹாசன் நடிப்பில் வெளியான “உன்னைப்போல் ஒருவன்” படத்திற்கு இசையமைத்து இசையமைப்பாளராகவும் மாறினார்.

லண்டனில் இசை நிகழ்ச்சி, ஸ்ருதி ஹாசன் நெகிழ்ச்சி!தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக விளங்கும் கமலஹாசனின் மகள் ஸ்ருதிஹாஸன் ஆவார். இவர் இசையை கல்வியாக பயின்றவர். இவர் ஹிந்தியில் 2009ல் “லக்” படத்தில் ஹிரோயினாக அறிமுகமானார். தமிழ் சினிமாவில் ஹிரோயினாக சூர்யாவின் “ஏழாம் அறிவு” படத்தில் அறிமுகமானார்.

ஆனால் அதற்குப் பிறகு நடிப்பில் கவனம் செலுத்திய அவர் பாடல்கள் மட்டுமே பாடி வந்தார். வேறு எந்த படங்களுக்கும் அவர் இசையமைக்கவில்லை. கமலின் தேவர்மகன் படத்தில் குழந்தையாக இருந்தபோதே அவர் பாடல்கள் பாட ஆரம்பித்துவிட்டார். ஹேராம் படத்தில் இவர் பாடிய “நீ பார்த்த பார்வைக்கு நன்றி” பாடல் மிகவும் பிரபலமானது. நடிப்பில் கவனம் செலுத்தி வந்த இவர் திடீரென நடிப்பை நிறுத்தி மீண்டும் இசை ஆல்பங்கள் மற்றும் இசை நிகழ்சிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

இவர் வெளிநாட்டு இசை கலைஞர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சிகள் செய்து வருகிறார், மேலும் தனது தனி ஆல்பத்தையும் அவர் தயாரித்து வருகிறார். லண்டன் துணி நிறுவனமான Fiorucci க்காக நேற்று லண்டனில் ரசிகர்கள் முன் உலகளாவிய இசைக்கலைஞர்களுடன் இணைந்து இசை நிகழ்ச்சி நடத்தினார். பன்முகத்தனமை கொண்ட இவரது இந்த திறமையை பிரபலங்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

தற்பொது அமெரிக்க தொலைக்காட்சி தொடரான Treadstone ல் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். மேலும் தமிழில் நடிகர் விஜய் சேதுபதி ஜோடியாக இயக்குநர் ஜனநாதன் இயக்கத்தில் லாபம் படத்திலும் நடித்து வருகிறார். இந்த வருட இறுதியில் தனது முதல் ஆல்பத்தை வெளியிட உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். ஒரே நேரத்தில் தனக்கு பிடித்த இசை மற்றும் நடிப்பு இரண்டிலும் பணியாற்றுவது தனக்கு மகிழ்ச்சியளித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.