இன்றைய இளைஞர்கள் பின்பற்ற வேண்டிய சிறந்த முன்மாதிரி திலீபன்!

0

ஈழத்தின் இன்றைய இளைஞர் சமுதாயம் பல்வேறு சிக்கல்கள் நிறைந்த ஒரு சமுதாயமாக மாறி வருகிறது. தமிழ் ஈழ மக்களின் வாழ்க்கை முறை அவர்களின் ஒழுக்கம் அவர்களின் வரலாறு இவைகளுக்கு மாறாக ஒரு இளைஞர் சமுதாயம் உருவாகி வருகின்றது.

ஒரு காலத்தில் ஈழத்தில் இளைஞர்கள் சிறந்த முன்னோடிகளாகவும் சிறந்த போராளிகளாகவும் காணப்பட்டார்கள். தமது கல்வியாலும் அறிவுத் திறன்களும் இந்தியா மாத்திரமன்றி உலகமே வியக்கும் இளைஞர்களாக வாழ்ந்து காட்டி உள்ளார்கள்.

அவர்கள் வீரமான வரலாற்றையும் உன்னதமான வரலாற்றையும் எழுதி உள்ளார்கள். நன்றாக கல்வி கற்றவர்களாகவும் மிகுந்தவர்களாகவும் வாசிப்பு கொண்டவர்களாகவும் புதியவற்றை படைத்தவர்களாகவும் காணப்பட்டார்கள்.

திலீபன் க்கான பட முடிவு

அவ்வாறான ஒரு வரலாற்று சிறப்புமிக்க பிரவாகமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை எடுத்துக்கொள்ளலாம். தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் தன்னுடைய 16 ஆவது வயதில் ஈழ விடுதலைப் போராட்டத்தை ஆரம்பித்தார்.

அவ்வாறு ஒரு இளைஞனாக அவர் ஆரம்பித்த போராட்டத்தில் பல உன்னதமான திறன் மிக்க இளைஞர்கள் இணைந்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து இருந்தனர். தமிழீழ விடுதலைப் போராட்டம் உலகின் தலைசிறந்த ஒரு போராட்டமாக பெயர் பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

முழுக்க முழுக்க இளையவர்களை கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மற்றும் போராட்டம் இளைஞர் தரப்பால் கட்டி எழுப்பட்டம என்பதை நாம் ஒரு வரலாற்றுச் சாதனையாக பார்க்க வேண்டும். எனவே அத்தகைய ஒரு வரலாற்றுச் சூழலில் இன்று நமது இளைஞர்கள் எவ்வாறு காணப்படுகின்றன என்பதை அவதானிக்கவும் வேண்டும்.

2009 க்குப் பிறகான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மௌனிக்கப்பட்ட பின்னர் எழுத்தில் காணப்படும் இளைஞர் சமுதாயம் சீரழிவை நோக்கி நகர்கிற ஒரு சமுதாயமாக காணப்படுகின்றது.

திலீபன் க்கான பட முடிவு

இதற்கு முதன்மையான காரணமாக சரியான தலைமைத்துவம் இல்லை என்றே குறிப்பிடலாம். 2009க்கு முன்பு தமிழீழ விடுதலைப்புலிகள் இளைஞர்களை சரியான வழியில் வழிகாட்டி இருந்தனர். அவர்களுக்குத் தேவையான பயிற்சிகள் அவர்களுக்கு தேவையான வேலைகளை உருவாக்கியதோடு ஒழுக்கம் உள்ள இளைஞர்களை அன்று வளர்த்தெடுத்தனர்.

2009 க்குப் பின்னரான இன்றைய சூழலில் இளைஞர்கள் சிங்கள அரசின் சிங்கள ராணுவத்தின் பல்வேறு பொறிகளின் மத்தியில் வாழ்கின்றனர். இதனால் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை போதைப்பொருளுக்கு அடிமையானவர்களாக சட்டவிரோத போதைப் பொருளை பாவிப்பவர்கள் ஆக காணப்படுகின்றனர்.

அத்துடன் சுதந்திரம் விடுதலை சமூகப் பார்வையற்ற எந்திரத்தனமான இளைஞர்களாக அவர்கள் வளர்த்தெடுக்கப்படுகின்றனர். தமிழ் இனத்தை திட்டமிட்டு அழிக்க வேண்டும் என்பதற்காக இளைஞர்களை இத்தகைய பாதையில் தள்ளும் சிங்கள அரசின் செயற்பாடாகும்.

குறிப்பாக சிறிய வயதிலேயே மாணவர்களை போதைப்பொருளுக்கு அடிமையாக்கும் செயற்பாடு இடம்பெறுகின்றது. அத்துடன் வன்முறைகளில் ஈடுபடுகின்றனர் தரப்புகளையும் இளைஞர் தரப்புகளையும் சிங்கள ராணுவம் உருவாக்கி வருகிற. இதில் ஒன்றே ஆகும் ஆவா குழுவாகும். சட்டவிரோத வன்முறை கும்பலை உருவாக்கி ராணுவத்தை வடக்கு கிழக்கில் நிலைநிறுத்த சிங்கள அரசு முயற்சிக்கிறது.

எனவே இந்தச் சூழலில் தற்போது திலீபன் அவர்களின் நினைவு நாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்றது. திலீபன் அவர்கள் இளம் வயதில் 24 வயதில் தன்னுடைய உயிரை இந்த தேச விடுதலைக்காக அர்ப்பணித்தவர்.

திலீபன் க்கான பட முடிவு

தனது ஆசாபாசங்களை தொடர்ந்து தமிழீழ மக்களின் சுதந்திரத்திற்காகவும் விடுதலைக்காகவும் பன்னிரு நாட்கள் உண்ணாவிரதம் இருந்து தனது உயிரை இந்த தேசத்திற்காக கொடையாக அளித்த உன்னதமான போராளி திலீபன்.

எனவே சீரழிந்து போயிருக்கும் ஈழத் தமிழ் சமூக இளைஞர்களுக்கு திலீபன் அவர்கள் சிறந்த முன்னுதாரணமாக காணப்படுகின்றார். இரண்டு இளைஞர்கள் சிங்கள ராணுவத்தையும் திரைப்படங்களில் வரும் வன்முறையாளர்களையும் பின் தொடர்வதையும் பின்பற்றுவதும் விட்டு திலீபன் போன்ற உன்னதமான போராளிகளை பின்பற்றி தங்களை ஒழுக்கமானவர்களாக தேசம் மீது பற்று கொண்டவர்களாகவும் சமூகப்பார்வை மிகுந்தவர்களாகவும் வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.

வெறுமனே, திலீபன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு அவரது நினைவு துபிக்கும் தீபம் ஏற்றாமல், இளைஞர் சமுதாயத்தின் இடையே அவருடைய கருத்துக்களை விதைத்து அவருடைய பாதையின் அர்த்தங்களை எடுத்துரைத்து இளைஞர் சமுதாயத்தை சரியாக வழி நடத்துவதுதான், தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு நாம் செய்யும் சிறந்த அஞ்சலியாக அமையும்.

ஆசிரியர், ஈழம்நியூஸ். 21.09.2019

Leave A Reply

Your email address will not be published.