ஜனாதிபதித் தேர்தலுக்கான ஒத்திகை இன்று!

0

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் இன்று (11) இடம்பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக காலி மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் சோமரத்ன விதானபத்திரண அறிவித்துள்ளார்.

இத்தேர்தலில் 28 பிரதேச சபை உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 17 பேர் வட்டார ரீதியாகவும், 11 பேர் விகிதாசார ரீதியாகவும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

அத்தோடு இத்தேர்தலில் எல்பிட்டிய பிரதேச சபைக்கு உட்பட்ட 53,384 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் இத்தேர்தலில் போட்டியிடுகின்றன.

இந்த தேர்தல் நாட்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான ஒத்திகை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் தொடர்ந்தும் தெரிவித்து வருகின்றனர்.

முடிந்தால் இந்த தேர்தலை வெற்றிகொண்டு காட்டுமாறு பொதுஜன பெரமுன கட்சி அரசாங்கத்துக்கு சவாலும் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.