ஈ.பி.டி.பி யின் சந்திரகுமார் அணியும் மொட்டுக்கு ஆதரவு; கள்ள உறவு வெளிச்சத்தில்

0

ஈழமக்கள் ஜனநாயகக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக் தோழர் (முருகேசு சந்திரகுமார் அவர்களும் தனது ஆதரவை கோத்தபாயவிற்கு வழங்கியுள்ளார் அவரின் கட்சியின் மத்திய குழுக்கூட்டத்திலே முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுவரை மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வந்தார் சந்திரகுமார் இளைஞர்களை யாழ்ப்பாணத்திற்கு நாமல் ராஜபக்ஸ வந்தபோது பிரதேசசபை உறுப்பினர் ரஜினிகாந் விளையாட்டு உபகரணங்கள் வாங்கித்தருவதாக கூறி யாழ்ப்பாணம் அழைத்துச்சென்றிருந்தார் பின்னர் மகிந்த கோட்டா வந்தபோதும் மக்களை வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் கூரே அவர்களின் வேண்டுதலுக்கு இணங்க சந்திரகுமார், மக்களை அனுப்பி வைத்திருந்தார். அத்துடன் அவரின் ஆதரவாளர்களின் முகப்புத்தகத்தில் கோத்தபாயவிற்கு ஆதரவாக பதிவுகளை இட்டு வருகின்ற வேளையில் தற்போது இவ் அறிவித்தலை சந்திரகுமார் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

ஏற்கனவே முன்னாள் ஆளுநர்களான சந்திரசிறி, ரெஜினோல்ட் கூரே,இணைந்த வடகிழக்கின் முன்னாள் முதல்வர் வரதராஜப் பெருமாள்,நாடாளமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், பொதுஜன பெரமுனவின் வடக்கு பிரிவு ஆகியோர் ஒரு புறமாகவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின டக்ளஸ் அணி மற்றொரு புறமாகவும் கோத்தா ஆதரவு பிரச்சாரம் களை கட்டி வருகிற நிலையில் சந்திரகுமாரின் ஆதரவும் கிடைத்துள்ளது ஈ.பி.ஆர் எல் எப் அமைப்பின் பழைய உறுப்பினர்கள் அனைவரும் கோத்தாவிற்கு ஆதரவு வழங்கியுள்ளனர்

Image result for chandrakumar with douglas devananda
Image result for chandrakumar with douglas devananda
Image result for chandrakumar with douglas devananda

Leave A Reply

Your email address will not be published.