கோலியின் ஆடைகளையே அணிந்து செல்கிறேன்.. அனுஷ்கா சர்மா உற்சாக பேட்டி!

0

விராட் கோலி- அனுஷ்கா சர்மா தம்பதிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். விராட் கோலியின் பிறந்தநாளை கொண்டாட இருவரும் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அப்போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

அனுஷ்கா சர்மா தனது சமீபத்திய பேட்டியில், ‘நான் எனது கணவரின் ஆடைகளை சில சமயங்களில் அணிந்து செல்வேன். விராட் அதனை ரசிப்பார். அதற்காகவே நான் அவரது ஆடைகளை அணிவேன். அது எனக்கும் மகிழ்ச்சியாக இருக்கும். படத்திற்காக எனக்கு பிடிக்காத சில ஆடைகளை அணிந்துள்ளேன். ஆனால் நிஜ வாழ்க்கையிலும் அப்படி இருப்பதில் எனக்கு விருப்பம் கிடையாது. 

டிரெண்ட் என்பதற்காக பிடிக்காத ஆடைகளை அணிய முடியாது.எனக்கு மிகவும் பிடித்த ஆடை புடவை தான். அதனால் தான் ரிசப்ஷனிற்கு கூட புடவை அணிந்தேன் என கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.