சீனா ஏரியில் மனித முகம் கொண்ட மீன் – வைரலாகும் வீடியோ

0

சீனாவில் தெற்கு பகுதியில் உள்ளது கன்மிங் நகரம். இப்பகுதியில் உள்ள கிராமத்திற்கு சுற்றுலாப்பயணி ஒருவர் சென்றுள்ளார். அங்குள்ள இயற்கை அழகை வீடியோவாக பதிவு செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஏரியை வீடியோ எடுத்த அவர் மனித உருவம் கொண்ட ஒரு வினோத மீனை கண்டுள்ளார்.

ஏரியின் விளிம்பில் நிந்திய அந்த மீன் சிறிது நொடிகள் தலையை உயர்த்தியதை அவர் கண்டுள்ளார். மீனின் தலையில் இரண்டு கண்கள் போல தோற்றமளிக்கும் இருண்ட புள்ளிகள், மூக்கின் பக்கங்களை ஒத்த இரண்டு செங்குத்து கோடுகள் மற்றும் வாய் இருக்கும் இடத்தில் அமைந்திருந்த ஒரு கிடைமட்ட கோடு என மனித முகத்தை போலவே தோற்றமளித்துள்ளது.

இந்த வீடியோவை அவர் உடனே சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இணையவாசிகள் அனைவரும் அந்த மீனைப்பற்றி  தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.