ராணாவுடன் டேட்டிங்கா… மனம் திறக்கும் ரகுல்!

0

தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ரகுல் ப்ரீத்சிங். தமிழ், தெலுங்கு மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். தற்போது இந்தியன்2  படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அவரும் பிரபல தெலுங்கு நடிகர் ராணாவும் டேட்டிங் செய்வதாக செய்தி வெளியானது.

இந்நிலையில் ரகுல் ப்ரீத்சிங் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் இந்த செய்தி தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும் போது, ‘என்னுடன் நடித்தவர்கள், நடிக்காதவர்கள் என அனைவரிடமும் நான் நட்புடன் பழகுகிறேன். ராணாவுடன் ஒருபோதும் டேட்டிங் செய்ததில்லை. நான் தனிமையில் தான் வாழ்ந்து வருகிறேன். நாங்கள் இருவரும் காதலிப்பதாக பரவும் செய்தி வெறும் வதந்தி தான்’ எனக் கூறி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.