விக்ரம் 58 பட சுவாரஸ்ய அப்டேட்…!

0

கடாரம் கொண்டான் படத்தினை தொடர்ந்து  இமைக்கா நொடிகள் பட இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வருகிறார். பெயரிடப்படாத இந்தப் படம் தற்காலிகமாக விக்ரம் 58 என்று அழைக்கப்படுகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில்   கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து விட்டதாக இஃர்பான் பதான் தெரிவித்தார்.

இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு வரும் நவம்பர் 11ம் தேதி கேரளா அலெப்பியில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்காக ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு பாடலை முடித்து விட்டதாகவும், அந்த பாடலை கேரளாவில் எடுக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.