சஹ்ரானுடன் தொடர்பு – 64 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!

0

தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்புடன் தொடர்பு கொண்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 64 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு நேற்று05) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வேளையில் நீதவான் ஏ.சி.ரிஸ்வான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

நுவரெலியாவில் உள்ள தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பின் தலைமையகத்தில் ஆயுத பயிற்சி எடுத்ததாக குறித்த நபர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.

இந்த சந்தேகநபர்கள் காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது

Leave A Reply

Your email address will not be published.