வடக்கு மாகாண சபையை என்னிடம் தந்திருந்தால் பாலும் தேனும் ஓடியிருக்கும்: டக்ளஸ்

0

கடந்த வடக்கு மாகாணசபையின் ஆட்சி அதிகாரம் தமக்கு கிடைத்து இருந்தால் வடக்கு மாகாணத்தில் பாலும் தேனும் ஓடியிருக்கும் என கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கடற்றொழில்சார் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணம் தீவகப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஊர்காவல்துறை பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

கடற்றொழில் அபிவிருத்தி மற்றும் கடலட்டை, இறால் மற்றும் நண்டு வளப்பு தொடர்பான கலந்துரையாடலாக குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

கலந்துரையாடலில் ஊர்காவல்துறை பிரதேச செயலாளர் மஞ்சுலாதேவி சதீஸ், காரைநகர், வேலணை மற்றும் ஊர்காவல்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பயனாளிகள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது கருத்து தெரிவித்த கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ,

கடந்த வடக்கு மாகாணசபையின் ஆட்சி அதிகாரம் தமக்கு கிடைத்து இருந்தால் வடக்கு மாகாணத்தில் பாலும் தேனும் ஓடியிருக்கும்.

அத்தோடு நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தன்னை நம்பி கோட்டாபய ராஜபக்சவிற்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களிடம் கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் மக்கள் தன்மீது நம்பிக்கை வைக்கவில்லை என அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.