வளைகுடா ஒத்துழைப்பு நாடுகளின் மாநாடு டிசம்பர் 10 இல்

0

வளைகுடா ஒத்துழைப்பு நாடுகளின் மாநாடு இம்மாதம் (10) இல் சவூதிஅரேபியாவின் தலைநகர் ரியாதில் நடைபெறவுள்ளது.

பிராந்திய அரசியல், பொருளாதாரம், பாதுகாப்பு,சமூக விடயங்கள் குறித்து இம்மாநட்டில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கட்டார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், பஹ்ரைன், குவைத், ஓமான் ஆகிய ஏழு நாடுகள் அங்கம் வகிக்கும் இந்த அமைப்பு வளைகுடா பிராந்தியத்தில் மிகப் பலம் பொருந்திய அமைப்பாகக் காணப்படுகிறது.

இந்நாடுகளிலுள்ள எண்ணெய் வளங்களே இப்பலத்திற்கு முக்கிய பங்காற்றுகிறது. பிற நாடுகளின் சுரண்டல்களிலிருந்து எண்ணெய் வளங்களைப் பாதுகாத்து பொருளாதாரத்தைப் பலப்படுத்தல், பொதுவான எதிரிகளை அடையாளம் கண்டு அந்நாடுகளைத் தனிமைப்படுத்தல், அரேபியர்களின் தனித்துவம், கலாசாரத்தைப் பேணல் போன்ற முக்கிய குறிக்கோள்களின் அடிப்படையில் இவ்வமைப்பு ஒன்றித்துச் செயற்படுகிறது

Leave A Reply

Your email address will not be published.