கோடி, கோடியாய் வசூலிக்கும் தர்பார்: எங்கெங்கு எத்தனை கோடி தெரியுமா?

0

தர்பார் படத்தின் இரண்டாம் நாள் வசூல் நிலவரம் வெளியாகத் துவங்கியுள்ளது.

தர்பார்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்த தர்பார் படம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸானது. படத்தை பார்த்த ரஜினி ரசிகர்கள் சான்சே இல்லை. மரண மாஸ், வெறித்தனம் என்று தெரிவித்துள்ளனர். மற்றவர்கள் படத்தில் கதையே இல்லை என்றனர். இந்நிலையில் தர்பார் படத்தின் இரண்டாம் நாள் வசூல் விபரம் வெளிவரத் துவங்கியுள்ளது.

ரூ. 36 கோடி

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இந்தியாவில் மட்டும் 4 ஆயிரம் ஸ்கிரீன்களில் வெளியான தர்பார் 9ம் தேதி மட்டும் நாடு முழுவதும் ரூ. 36 கோடி வசூலித்துள்ளது. தர்பார் ரிலீஸான அன்று தமிழகத்தில் மட்டும் ரூ. 18.30 கோடி வசூல் செய்துள்ளது. தர்பார் வெளியான அன்று இந்தியில் மட்டும் ரூ. 1.20 கோடி வசூலித்துள்ளது. பிற மாநிலங்களில் தமிழ் மொழியில் வெளியான தர்பார் ரூ. 70 லட்சம் வசூல் செய்துள்ளது.

அமெரிக்கா

தர்பார் அமெரிக்காவில் ப்ரீமியர் ஷோக்கள் மற்றும் கடந்த 2 நாட்கள் நடந்த காட்சிகள் மூலம் ரூ. 5 கோடியே 93 லட்சம் வசூல் செய்துள்ளது. அமெரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தர்பாருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள்

தர்பார் படம் ரிலீஸான சில மணிநேரத்தில் தமிழ் ராக்கர்ஸில் கசிந்தது. படம் தமிழ் ராக்கர்ஸில் வந்தாலும் மீண்டும், மீண்டும் தியேட்டருக்கு சென்று பார்த்து தர்பாரை ஹிட்டாக்குவோம் என்று ரஜினி ரசிகர்கள் தெரிவித்தனர். அதில் சில ரசிகர்கள் சொன்னபடி ஒரு நாளில் 2, 3 காட்சிகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

Leave A Reply

Your email address will not be published.