சொந்தப் பணத்தை செலவு செய்வதற்கு முடிவெடுத்த கோட்டாபய!

0

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் அண்மைக்கால செயல்பாடுகளை எதிர் கட்சியினரே பாராட்டும் அளவிற்கு சென்றுகொண்டிருக்கிறது. ஆனாலும் அரசியல் ரீதியான செயல்பாடுகளை எதிர் தரப்பினர் எதிர்க்காமல் இல்லை.

எவ்வாறாயினும், ஜனாதிபதி கோட்டாபய பதவியேற்றதன் பின்னர் அரச தலைவர்களின் புகைப்படங்களை அலுவலகங்கள் திணைக்களங்களில் வைக்கக் கூடாது என்பதில் தொடங்கி, அரச திணைக்களங்கள், மருத்துவமனைகள் பல்கலைக்கழகங்கள் வரை நேரடியாகச் சென்று மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வது வரை அவரின் செயல்பாடுகள் வரவேற்கத்தக்கதாக அமைந்திருக்கிறது.

இந்தநிலையில், தற்போது தன்னுடைய மருத்துவப் பரிசோதனைக்காக சிங்கப்பூர் செல்வதற்கு தீர்மானித்திருக்கிறார்.

இந்த பயணத்திற்கான எந்த செலவுகளையும் அரசாங்கம் செலுத்தக் கூடாது என ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக அவரை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

இதனடிப்படையில், ஜனாதிபதியின் விமான பயணச்சீட்டு மட்டுமல்லாது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகளுக்கான பயணச்சீட்டு, ஹொட்டல் கட்டணம், மருத்துவமனை கட்டணம் என்பன ஜனாதிபதியின் சொந்த பணத்தில் செலுத்தப்பட உள்ளது.

மக்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் தமது தனிப்பட்ட செலவுகளை தாமே ஏற்க வேண்டும் என்ற கொள்கையை ஊக்குவிப்பதற்காக ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதியின் இந்தச் செயல்பாடுகள் பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. ஆனால் மகிந்த ராஜபக்சவின் காலத்தில் வெளிநாட்டுப் பயணங்களின் போது அரச பணத்தில் பெரும் பட்டாளமே வெளிநாடு சென்றதாக எதிர்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆனால், ஜனாதிபதி கோட்டாபய அதற்கு நேர்எதிராக செயல்படுகிறார் என்று தென்னிலங்கை அரசியல்வாதிகளும் மக்களும் பேசத் தொடங்கியிருப்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.