ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்தத் தடையுமில்லை- நாமல்

0

தென்னிந்திய நடிகர் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்தத் தடையுமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வருவதில் எந்தத் தடையுமில்லை. அது பற்றிய வதந்திகளில் எந்த உண்மையுமில்லை.

நானும் எனது தந்தையாரும் ரஜினிகாந்த் திரைப்படங்களின் பெரும் ரசிகர்கள்.

அவர் இலங்கை வர விரும்பினால் நிச்சயம் வரலாம், ஒரு தடையுமில்லை” என நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்தினை இலங்கை வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

எனினும், அரசியல் ரீதியான பயணங்களுக்கு அவருக்கு அனுமதி வழங்கப் போவதில்லை என இலங்கை அரசாங்கம் கூறியதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்தநிலையில் ரஜினி காந்த்திற்கு விசா வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக வெளியான செய்தியினை இலங்கை அரசாங்கமும் அண்மையில் மறுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Namal Rajapaksa@RajapaksaNamal

நடிகர் #Rajinikanth இலங்கை வருவதில் எந்தத் தடையுமில்லை, அது பற்றிய வதந்திகளில் எந்த உண்மையுமில்லை. நானும் எனது தந்தையாரும் திரு. ரஜினிகாந்த் திரைப்படங்களின் பெரும் ரசிகர்கள். அவர் இலங்கை வர விரும்பினால் நிச்சயம் வரலாம், ஒரு தடையுமில்லை.4,6459:54 AM – Jan 18, 2020Twitter Ads info and privacy1,335 people are talking about this

Leave A Reply

Your email address will not be published.