மது குடித்தால் கொரோனா வைரஸ் பரவாது? உலக சுகாதார அமைப்பு விளக்கம்..

0

உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்றால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்றால் 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், சில பொய்யான தகவல்கள் பரவி வருகின்றன. மது அருந்தினால் கொரோனா வைரஸ் பரவாது என சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 

இதற்கு விளக்கம் அளித்துள்ள உலக சுகாதார அமைப்பு, கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் மது அருந்துவதாலோ, மதுவை தெளித்துக் கொள்வதாலோ குணப்படுத்த முடியாது என தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.