நீதியரசர் விக்னேஸ்வரனுக்கு நமது பொன்னான வாக்குகளை அளிப்போம்!

0

இலங்கை பாராளுமன்ற தேர்தலில் இன்றைய தினம் தபால் மூல வாக்களிப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் இம்முறை யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை குறித்து நாம் சிந்தித்து உரையாட வேண்டிய தருணம் இதுவாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகளால் இனம் காட்டப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் கடந்த காலத்தில் பெரும் வெற்றியை அளித்து வந்துள்ளார்கள். இந்த முறையும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தான் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமா?

அண்மையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் தலைவர் பிரபாகரனுக்கு எதிராகவும் சிங்கள தொலைக்காட்சியில் பேசிய கருத்துக்களை அனைவரும் பார்த்திருந்தோம்.

அதைப்போல அவருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருக்க சிறிதரன் அவர்கள் சுமந்திரனை பாலா அண்ணாவுடன் ஒப்பிட்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் தலைவரையும் கொச்சைப்படுத்தும் விதமான கருத்துக்களை கூறியிருந்தார.

இவ்வாறான அதிரடிகளை மத்தியிலே இவர்களுக்கு நாம் வாக்களிக்க தான் வேண்டுமா?

தமிழ் மக்களின் உரிமைக்காக மிகவும் அர்ப்பணிப்புடன் நடந்து வருகின்ற வடக்கின் முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன். கஜேந்திரகுமார் போன்றவர்களுக்கு வாக்களிக்க முன்வரவேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் இனத்துக்கு துரோகம் செய்த காரணத்தால்தான் விக்னேஸ்வரன் அவர்கள் கூட்டமைப்பை விட்டு விலகி தனியான அரசியல் கட்சியைத் தொடங்கினார்.

வடக்கு மாகாண சபையில் அவர் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்ற தீர்மானத்தை நிறைவேற்றியமே வரலாற்று சிறப்புமிக்க விடயமாகும்.

2013 ஆம் ஆண்டில் நடந்த மாகாண சபைத் தேர்தலில் மக்களுக்கு வழங்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகளுக்கு செயற்பட்டமை சுமந்திரன் சம்பந்தன் போன்றோரின் எதிர்ப்புக்கு விக்னேஸ்வரன் ஆளாக காரணமாக இருந்தது.

இன்றும் இனப்படுகொலைக்கான நீதியை வெளியிடல் வடகிழக்கு இணைந்த சமஷ்டி தமிழ் தேசியத்தினை வெல்லுதல் என்ற இலக்கில் விக்னேஸ்வரன் அவர்கள் தெளிவாகவும் சரியாகவும் பயணித்து வருகின்றார்.

எனவே அவருக்கு ஆதரவு வழங்கி அவர் தலைமையில் திரண்டு இருப்பவர்களுக்கு ஆதரவை வழங்கி அவர்களை பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்வு செய்வதே தமிழர்கள் என்று உள்ள அவசியமான கடமையாகும்.

அதன்மூலம் இனப்படுகொலைக்கான தீர்வு என்று வட கிழக்கு இணைந்த தமிழர் தேசத்தில் தமிழ் மக்கள் அமைதியாக வாழக் கூடிய ஒரு சூழ்நிலை உருவாகும். இதற்கு விக்னேஸ்வரனின் குரல் அவசியமானது என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

ஆசிரியர் – ஈழம்நியூஸ் 13.07.2020

Leave A Reply

Your email address will not be published.