இக்கணத்தில் வா ழென
இடித்துரைத்த பலரை
இக்கணத்தில் நினைக்கிறேன்
தக்கன பிழைக்குமென
தகாதன சொல்லவில்லை
இக்கணத்தைப்போல
இனியும் வருமா கணமென
இக்கணம் கேட்கிறது
இக்கணத்தில் வாழ்பவன்
இலக்கணத்தை போன்றவன்
நேற்றைகளைச் சுமக்காதே தலை பாவம்
நாளைகளை அடுக்காதே வாழ்தல் பாவம்
இன்றைகளை இனிமையாக்கு
அக்கணமும் அழகென வாகும்
நாளை யென்பது இல்லை போலே
இல்லைகளே நிரந்தரம்
அதை நினைக்கில் அந்தரம்
வெறுமை பேசும் தத்துவத்தை எங்கும்காணாய்
மனிதனொரு புத்தகம்
சில புத்தகம் எழுதப் படாதவை
சில புத்தகம் வாசிக்கப் படாதவை
சில புத்தகம் வாசித்தும் விளங்காதவை
சில புத்தகம்வாசித்து வலிப்பவை
ஆதலால் இக்கணத்தை வாழ்
அக்கணத்தை காலம் பேசும்.
த. செல்வா

இரவு 10.04.06.09.2020