உலகம் முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 கோடியே 92 இலட்சத்தையும் தாண்டியுள்ளது.
கொரோனா வைரஸின் முதற் கட்ட அலை முடிந்த நிலையில் தற்பொழுது இண்டாவது கட்ட கொரோனா அலை உலகை ஆட்டிப்படைத்து வருகின்றது.
அமெரிக்கா உட்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகள் இதனால் சிக்கத் தவிக்கின்றன. இதேவேளை பல்வேறு நாடுகளும் கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ள நிலையில், அதனை மக்களுக்கு வழங்க நடடிக்கை எடுத்து வருகின்றன.
அந்தவகையில் பிரிட்டன், கொரோனா தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்கும் நடிவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
மேலும் உலக நாடுகள் கொரோனா வைரஸிற்கான தடுப்பு மருந்தை இலவசமாக வழங்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
இந்த விதமான சூழ்நிலைக்கு மத்தியில் கொரோனா வைரஸின் பிறப்பிடமாக கண்டறியப்பட்ட சீனாவின் வுஹான் மாகாணம் புதுபொழிவு தர ஆரம்பித்துள்ளது.
கடந்த ஒரு வருடகாலத்திற்கு முன்னர் இதே வுஹான் மாகாணத்தில் இறைச்சி விற்பனை காரணமாக கொரோனா என்ற கொடிய வைரஸ் உலகை ஆட்டிப்படைக்கும் வகையில் ஆரம்பமானதாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து வுஹான் மாகாணம் முற்றுமுழுதாக முடக்கப்பட்டு மக்கள் சன சந்தடி அற்ற பிரதேசமாக மாறியது.
இந்நிலையில் வுஹான் பிரதேசம் புதுப் பொழிவுடன் ஆரம்பமாகிவயுள்ளதுடன் பூங்காக்கள், வர்த்தக நிலையங்கள், களியாட்ட விடுதிகள் என அனைத்தும் இயங்கத் தொடங்கிவுள்ளன.
இதேவேளை வுஹானில் கொரோனா வைரஸ் உருவானதா என்று கூறமுடியாத நிலையில் அங்கு சகஜ நிலை ஆரம்பமாகியுள்ளது.
மீண்டும் முன்னர் போன்று மீன் வர்த்தகம், இறைச்சி வர்த்தகம் அனைத்தும் ஆரம்பமாகியுயள்ளன.
இந்நிலையில் சீனா கொரோனா வைரஸின் பிறப்பிடம் வுஹான் அல்ல எனவும் இந்தியா, அவுஸ்திரேலியா என பல்வேறு நாடுகளையும் சுட்டிக்காட்டி வருகின்றது.
எவ்வாறிருப்பினினும் விலங்களிலிருந்தே கொரோனா வைரஸ் பரவியது என்பதை மறுப்பதற்கில்லை.
அந்தவகையில் உலகில் பல்வேறு நாடுகளிலும் காடுகள் அழிக்கப்பட்டமையும் விலங்குகள் நகரங்களை நோக்கி இடம்பெயர ஆரம்பித்தமையுமே கொரோனா வைரஸ் பரவுதற்கு காரணமாகிவிட்டது.
இதேவேளை ஸ்பெயினின் மொத்தப் பரப்பளவை விட அதிக அளவில் அமேசன் காடுகள் அழிக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகின்றது.
தென்னமெரிக்கா கண்டத்தில் உள்ள பிரேஸில், பெரு, வெனிசுலா, கொலம்பியா, பொலிவியா, ஈக்குவடோர், கயானா ஆகிய நாடுகளில் அமேசன் காடுகள் பரவியுள்ளன.
அந்த வகையில் உலகிற்கு மழையையும் ஒட்சிசனையும் வழங்கும் அமேசன் காடுகள் உலகின் நுரையீரல் என அழைக்கப்படுகின்றது.
இந்நிலையில் காடுகள் அழிக்கபட்டதால் இயற்கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு இவ்வாறான கொடிய வைரஸ்கள் பரவ காரணமாகியும் விட்டது.
எனவே இயற்கையை பாதுகாப்பதன் வாயிலாகவே கொரோனாவை அடியோடு அழிக்கக் கூடியதாக இருக்கும். மக்கள் இதனை உணர்ந்து இயற்கையை பாதுகாக்கவும் அதனை சுத்தமாகப் பேணவும் நடவடிக்கை அவசியம் என்பதை நினைவுபடுத்த விரும்புகின்றோம்.