இலங்கைக்கு கொரோனா தடுப்பூசி: கோத்தபாயவின் அதிரடி அறிவிப்பு

0

இந்தியாவில் தயாரிக்கப்படும் கொவிட்-19 தடுப்பு மருந்து, எதிர்வரும் 27 ஆம் திகதி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதன்படி, இந்தியாவினால் இலங்கைக்கு 600,000 கொவிட் – 19 தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தடுப்பூசி கிடைக்கப்பெற்ற மறுநாள் முதல் அதனை மக்களுக்கு செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய ஜனாதிபதி, முதல் கட்டமாக வைத்தியர்கள், பொதுசுகாதார பரிசோதகர்கள், தாதியர்களுக்கும் வழங்கப்படும் எனவும், அதன் பின்னர் இராணுவம், பொலிஸாருக்கும், வயோதிபர்களுக்கும் செலுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

களுத்துறை, வலல்லாவிட்ட பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

ஒக்ஸ்போர்ட் – அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த இலங்கை அரசாங்கம் நேற்று அனுமதி வழங்கியிருந்தது.

 அவசர தேவையின் பொருட்டு இந்த தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி அளித்துள்ளமைக்கு இந்தியா தனது வரவேற்பை தெரிவித்திருந்ததோடு  கொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு வழங்க  இணக்கமும் வெளியிட்டிருந்தது.

இந்நிலையிலே நாட்டுக்கு கொரோனா தடுப்பூசிகள் கொண்டு வருது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

இந்தியாவில் இருந்து முதல் கட்டமாக கொண்டுவரப்படும் 6 இலட்சம் தடுப்பூசிகளில் மூன்று இலட்சம் தடுப்பூசிகளை இந்தியா இலங்கைக்கு இலவசமாக வழங்கி வைக்கின்றது.

தடுப்பூசி கிடைக்கப்பெற்ற மறுநாள் முதல் அதனை மக்களுக்கு செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

முதல் கட்டமாக வைத்தியர்கள், பொதுசுகாதார பரிசோதகர்கள், தாதிகளுக்கும் வழங்கப்படும் எனவும் அதன்பின்னர் இராணுவம், பொலிஸாருக்கு செலுத்தப்பட்டு வயோதிபர்களுக்கு செலுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இதனையடுத்து, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளில் இருந்தும் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.

Leave A Reply

Your email address will not be published.