ஐ.நாவில் நீதியை நிலைநாட்ட ‘நம் ஒற்றுமை’ முதலில் தேவை!

0

எமது தாயகத்தில் 2009 மே மாதம் எதிர்பாராத வகையில் தமிழ் மக்கள் மீது உலக நாடுகள் ஒன்று சேர்ந்து தொடுத்த பாரிய தாக்குதல்கள் அந்த குறுநாட்டை குதறி எடுத்தன. தங்களுக்குள் மோதிக் கொண்ட பல நாடுகள் கூட விடுதலைப் புலிகள் ,யக்கத்தை மட்டுமல்லரூபவ் ஒன்றும் அறியாத தமிழ் மக்களையும் அவர்களில் காணப்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர் சிறுமியர் ஆகியோரையும் கொன்றழித்த அந்த நாட்கள் மறக்க முடியாதவை.

அதனிலும் கொடியவை முள்ளிவாய்க்கால் என்னும் ஒரு மூலையில் முடிக்கப்பட்ட எமது மக்களுக்கும் , இனத்திற்கும் எதிரான யுத்தம்.  அன்றிலிருந்து , இன்றுவரை மேலும் , இறப்புக்கள், இழப்புக்கள் என எமது தமிழினம் அனுபவிக்கும் கொடுமைகள் ஏராளம்.  இவ்வாறான அழிவிற்குள் தள்ளப்பட்ட எமது மக்களுக்கு நீதி கேட்டு போராடுவோம் என்று புறப்பட்டவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள். அமைப்புக்கள் ஆலோசனைக் குழுக்கள் என பலரும் பயணித்து உலகெங்கும் கருத்தரங்குகளை நடத்தினார்கள்.

இவ்வாறாக செயற்பட்டவர்கள் ஐக்கிய நாடுகளை சபையிலும் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து வார்த்கைகளால் போராடினார்கள். இலங்கையிலிருந்து தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட பயணித்து வந்தார்கள். போனார்கள். ஆனால் இன்றுவரை 11 வருடங்களுக்கு மேலாக கடந்தும் எதைச் சாதித்தாரகள் என்று பார்த்தால்,  அதற்கு பதில் பூச்சியம் தான். காலத்தைக் கடத்தினார்கள் சிலர்.

கோடரிக் காம்புகளாக மறைந்திருந்து செயற்பட்டார்கள் சிலர். புலம் பெயர் நாடுகளில் முன்வந்து பணியாற்ற வேண்டிய பல அமைப்புக்கள் சார்ந்தவர்கள் தங்களை மறைத்துக் கொண்டார்கள் சிலர். மௌனமாக இருப்பது தங்களுக்கு நலலது என்று அடங்கியிருந்தார்கள்.

ஆனால் மறுபக்கத்தில் பாதிக்கப்பட்டவர்கள்,  முன்னாள் போராளிகள்,  அவர்தம் குடும்பங்கள்,  இலங்கை அரசினால் காணாமால் ஆக்கப்பட்டவர்கள்,  அவர்களின் குடும்பங்கள்,  மக்கள் நலனுக்காக உழைத்த பெருமக்கள். இவ்வாறானவர்கள் அனைவரும் ஏமாற்றப்பட்டவர்களாக தொடர்ந்து துன்பத்திலும் மன அழுத்தத்திலும் மூழ்கிப் போனவர்களாகவே உள்ளார்கள்.

ஆனால் சில உலக நாடுகளில் தோன்றிய பல அமைப்புக்கள் அறிக்கைகளை வெளியிட்ட வண்ணம் செயற்பட்டார்கள், ஆனால் ஓரிரு அமைப்புக்கள் மெதுவாக தங்கள் முகங்களை தமிழர்கள் பக்கம் காட்டிய வண்ணம் நகர்ந்து தமிழர்களுக்கு பாதகமான முடிவுகள் கிட்டும் வகையில் செயற்படத் தொடங்கினார்கள். முன்னைய மைத்திரி-ரணில் ஆட்சியில் சில தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் காட்டிய வழியில் சென்று  இலங்கை அரசிற்கு  இரக்கம் காட்டுபவர்களாக மறைமுகமாகச் செயற்பட்டார்கள்.

இவ்வாறான பாதகமான பாதையில் பயணித்தவர்கள் இலங்கை அரசின் போர்க்குற்ற விசாரணைகள் பின்தள்ளிப் போவதற்கு துணையாக நின்றார்கள். இன்றும் அந்த பாதகம் செய்யும் பணியைத் தொடர்ந்த வண்ணமே உள்ளார்கள் அவர்கள்.

ஆனால் தாயகம் மற்றும் புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் திடீரென எழுந்து நின்று கேள்விகள் கேட்கின்றார்கள்.  ”எமது புலம் பெயர் அமைப்புக்கள் இத்தனை நாட்கள் எதைச் சாதித்தன?”என்று.

ஆனால் அவர்களுக்கு பதில்களை கிடைத்ததோ? அன்றி மறுக்கப்பட்டதோ? அது தெரியாத நிலையில் சில உண்மைகள் வெளியாகி உள்ளன. ”இங்கிலாந்தில்  தமிழர்களின் அரசியல் நலன்களைக் கவனிக்கின்றோம்” என்று புறப்பட்ட GTF என்னும் உலகத் தமிழர் பேரவை அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் சிலர்,  நாம் முன்னர் குறிப்பிட்டது போன்று பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணங்கள் நிறைவேறுவதற்கு தடையாகச் செயற்பட்டார்கள்.

மைத்திரி – ரணில் ஆட்சியில் அந்த அரசின் விருந்தினர்களாக இலங்கையின் தலைநகருக்கு அழைக்கப்பட்டார்கள். விருந்துண்டார்கள். இதனால்  பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கைகள் குறைந்த பட்சம் கேட்கப்பட வேண்டிய சபைகளில் அல்லது கூட்டங்களில் கேட்கப்படவில்லை. அவர்களுக்கு கிட்ட வேண்டிய நீதி கிட்டவே இல்லை. இந்த செயற்பாடுகளை சாதாரண மக்கள் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் எமது மக்களின் தூரதிஸ்டம் எதுவென்றால்  இவ்வாறாக எமது மக்களின் குரல்கள் மற்றும் கதைகள் கேட்கப்பட வேண்டிய இடங்களில் இன்னும் கேட்கப்படவில்லை. புல தமிழ் அமைப்புக்கள் கூட இந்த விடயங்களில் தடையாக இருக்கின்றன என்பதே கவலைக்குரிய விடயமாகும்.

எனவே மக்கள் விழித்தெழ வேண்டிய நேரம் வந்துள்ளது. அடுத்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபைக் கூட்டத்தில் இனிமேலாவது பாதிக்கப்பட்ட மக்களின் குரல்களும் அவர்களின் கதைகளும் கேட்கப்பட வேண்டும். அவற்றிக்கு நீதி கிட்டவேண்டும் என்பதே எமது அவா.

Leave A Reply

Your email address will not be published.