கார் விபத்தில் மீண்டும் சிக்கினார் கோல்ப் வீரர் டைகர் வூட்ஸ்

0

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் செவ்வாய்க்கிழமை நடந்த ஒரு பெரிய கார் விபத்தில் கோல்ப் வீரர் டைகர் வூட்ஸ் காயமடைந்துள்ளதாக லொஸ் ஏஞ்சல்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால்  டைகர் வூட்ஸுக்கு காலில் கடுமையாக காயம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் லொஸ் ஏஞ்சல்ஸ் அதிகாரியொருவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

“கலிபோர்னியாவில் இன்று (செவ்வாய்) காலை டைகர் வூட்ஸ் ஒரு கார் விபத்தில் சிக்குண்டார். விபத்தினால் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டது. அவர் தற்போது அறுவை சிகிச்சையில் உள்ளார், உங்கள் தனியுரிமை மற்றும் ஆதரவுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

பெப்ரவரி 23 காலை 7:12 மணியளவில் லாஸ் ஏஞ்சல்ஸில் டைகர் வூட்ஸ்  ஒரு “அதிவேக” ஒற்றை கார் விபத்தில் சிக்கினார் என்று லொஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

விபத்தினையடுத்து டைகர் வூட்ஸ் மீட்பு படையினரால் மீட்கப்பட்டு அம்பியூலன்ஸின் உதவியுடன் வைத்தியசாலைக்கு கொண்டு சேர்க்கப்பட்டார்.

45 வயதான டைகர் வூட்ஸ்  15 முறை முக்கிய சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். கடைசியாக 2020 டிசம்பர் 20 அன்று பி.என்.சி. சாம்பியன்ஷிப்பில் தனது 11 வயது மகன் சார்லியுடன் விளையாடினார்.

டைகர் வூட்ஸ் கார் விபத்தில் சிக்கியது இது மூன்றாவது முறையாகும்

Leave A Reply

Your email address will not be published.