பிரபுதேவாவின் ‘பஹீரா’ டீசர் வெளியீடு

0

நடனப்புயல் பிரபுதேவாவின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ பஹீரா’ படத்தின் டீஸர் வெளியாகி இருக்கிறது.

‘திரிஷா இல்லனா நயன்தாரா’,  ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை இயக்கிய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைபடம் ‘பஹீரா’. இந்த திரைப்படத்தில் ‘நடனப்புயல்’ பிரபுதேவா கதையின் நாயகனாக நடிக்க, அவருடன் நடிகைகள் சோனியா அகர்வால், சஞ்சிதா ஷெட்டி, அமைரா தஸ்தூர், ஜனனி ஐயர், சாக்ஷி அகர்வால், ரம்யா நம்பீசன், காயத்ரி சங்கர் என ஐந்துக்கும் மேற்பட்ட நடிகைகள் நடித்திருக்கிறார்கள்.  அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, கணேசன் சேகர் இசை அமைத்திருக்கிறார்.

சைக்கோ மிஸ்திரி திரில்லர் ஜேனரில் தயாராகியிருக்கும் ‘பஹீரா’ திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகியிருக்கிறது.  வெளியான 2 மணித்தியாலங்களுக்குள் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்று இணையத்தில் சாதனை படைத்து வருகிறது.‌ டீஸரில் பிரபுதேவா பல்வேறு கெட்டப்புகளில் வந்து மிரட்டுவதும், கவர்ச்சி தூக்கலாக இருப்பதும் இளைய தலைமுறை ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

‘பஹீரா’ படத்தை பற்றி அப்படத்தில் நடித்த நடிகைகளுள் ஒருவரான நடிகை ஜனனி ஐயர் பேசுகையில், ‘ இந்தப்படத்தில் ஹைதராபாத்தில் இருந்து சென்னை வரும்  மொடர்ன் பெண்ணாக நடித்திருக்கிறேன். இப்படத்தில் இடம்பெறும் கதாபாத்திரத்திற்காக என் சிகை அலங்காரத்தில் வண்ணம் பூசினேன். மொடர்ன் பெண்ணாக நடித்திருந்தாலும் கவர்ச்சியாக நடிக்கவில்லை. இதுவரை ரசிகர்கள் பார்க்காத ஜனனியை இந்த படத்தில் பார்க்கலாம். ‘ என்றார்.

Leave A Reply

Your email address will not be published.