புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பதிவியேற்றார் தமிழிசை!

0

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக தெலுங்கான ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பொறுப்பேற்றுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தமிழிசைக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

கிரண்பேடி நீக்கப்பட்டதையடுத்து பொறுப்பு ஆளுநராக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்  பொறுப்பேற்றார். புதுச்சேரியின் 5ஆவது பெண் ஆளுநராக தமிழிசை பொறுப்பேற்றுக்கொண்டார்.

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பதவி வகித்து வந்த கிரண்பேடி அப்பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூடுதலாக துணை நிலை ஆளுநர் பொறுப்பை கவனிப்பார் என குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.