அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகுவதாக முக்குலத்தோர் புலிப்படை அறிவிப்பு

0

அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த நடிகர் கருணாஸ் தலைமையிலான முக்குலத்தோர் புலிப்படை அந்த கூட்டணியில் இருந்து விலகி விட்டதாக அக்கட்சியின் தலைவரான நடிகர் கருணாஸ் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் நடிகர் கருணாஸ் தெரிவித்ததாவது…

” முக்குலத்தோர் சமுதாயத்தை அரசு புறந்தள்ளிவிட்டது. தேவர் சமுதாயத்தை சேர்ந்த எட்டு அமைச்சர்களும் அந்த சமுதாயத்தை புறக்கணித்து விட்டனர். 

இதனால் முக்குலத்தோர் புலிப்படை அதிமுக கூட்டணியிலிருந்து விலகுகிறது. ”என்றார்.

நடிகர் கருணாஸ் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் திருவாடானை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பதும், இவர் தலைமையிலான முக்குலத்தோர் புலிப்படை எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 80க்கும் அதிகமான தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாகவும், திருமதி சசிகலா அரசியலை விட்டு விலகுவதால் நடிகர் கருணாஸ் இதுபோன்ற ஒரு முடிவை மேற்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.