தெற்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட கோர விபத்தில் 13 பேர் பலி

0

அமெரிக்க-மெக்ஸிக்கோ எல்லைக்கு அருகே தெற்கு கலிபோர்னியாவில் ட்ரக் – கெப் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.

உள்ளூர் மருத்துவமனை அதிகாரிகள் ஆரம்பத்தில் இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்ததாக கூறினர், ஆனால் கலிபோர்னியா நெடுஞ்சாலை ரோந்து அதிகாரிகள் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 என உறுதிப்படுத்தினர்.

அத்துடன் இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் மெக்சிகன் மக்களும் அடங்குவதாக அவர் கூறினார்.

உயிரிழந்தவர்களில் குறைந்தது 10 பேர் மெக்சிகன் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஒரு மெக்சிகன் வெளியுறவு அமைச்சக அதிகாரி செவ்வாய்க்கிழமை இரவு அறிவித்தார்.

ஹோல்ட்வில் நகரின் வடக்கே செவ்வாய்க்கிழமை காலை அந் நாட்டு நேரப்படி 06:15 மணிக்கு  (14:15 GMT) இந்த பயங்கர மோதல் நடந்ததாக இம்பீரியல் கவுண்டி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. 

Leave A Reply

Your email address will not be published.