தொடர்ச்சியான ஏழு வெற்றிகளுடன் முதல் இடத்தில் இந்தியா

0

தொடர்ச்சியாக ஏழு வெற்றிகளுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று ஆமதாபாத்தில் நடைபெற்று முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டியின்போதே இந்தியா இந்த நிலையயைப் பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 205 ஓட்டங்களை எடுக்க பின்னர் விளையாடிய இந்திய அணி ரோகித் சர்மா, ரிஷத் பந்த், வொஷிங்டன் சுந்தரின் அபார ஆட்டத்தால் 365 ஓட்டங்களை எடுத்து 160 ஓட்டங்களினால் முன்னிலை பெற்றது. 

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 135 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, இன்னிங்ஸ் மற்றும் 25 ஓட்டங்களினால் தோல்வியைத் தழுவியது.

அதன்படி நான்கு போட்டிகள் கொண்ட இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. 

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்த்து இந்தியா விளையாடுவது உறுதியாகி உள்ளது. 

சொந்த மண்ணில் இறுதியாக விளையாடிய 28 டெஸ்ட் தொடர்களில் ஒன்றை மட்டுமே இந்திய அணி இழந்துள்ளது. 

West Indies 0 – India 2, August 2019

India 3 – South Africa 0, October 2019

India 2 – Bangladesh 0, November 2019

New Zealand 2 – India 0, February 2020

Australia 1 – India 2, December-January 2020-21

India 3 – England 1, February-March, 2021

Leave A Reply

Your email address will not be published.