பாகிஸ்தானில் போராடத்தயாராகும் காணாமால் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்

0

பாகிஸ்தானில் காணாமல்போன நபர்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் இந்த மாத இறுதிக்குள் மீட்கப்படாது விட்டால் ஏப்ரல் முதல் நாடு தழுவிய போராட்டத்தினை முன்னெடுப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில் பணியாற்றும் அமைப்பொன்று  இந்த அறிவிப்பினை விடுத்துள்ளது. 

பாகிஸ்தானின் கராச்சி ஊடக அமையத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய பாகிஸ்தானின் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் பற்றிய கூட்டு நடவடிக்கைக் குழு (ஜே.ஏ.சி) உறுப்பினர்கள், தங்கள் அன்புக்குரியவர்கள் காணாமல் போனது குறித்து கவலை தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் மீட்கப்படுவதில் பாகிஸ்தான் அரசாங்கமும் அரசு நிறுவனங்களும் தீவிரமாக செயற்படவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.

பாகிஸ்தான் அதிகாரிகள், காணாமலாக்கப்பட்டவர்களை மீட்பது தொடர்பில் பலமுறை உத்தரவாதங்களை  அளித்த போதிலும், காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் அக்குழுவினர் கூறினர்.

பாகிஸ்தானில் அமுல்படுத்தப்பட்ட மனித உரிமைகள் தொடர்பான நீண்ட பதிவில் காணாமலாக்கப்பட்ட விடயம் ஒரு கறையாகவே உள்ளது. 

அடுத்தடுத்து ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்கள் வாக்குறுதிகளை அளித்தாலும் சட்ட நடவடிக்கைகள் முறையாக முன்னெடுக்கப்படவில்லை என்பதோடு மெதுவான போக்கே அதிகமாக உள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

சிறுபான்மை சமூகங்களை  மௌனமாக்குவதற்கான ஒரு கருவியாக வலுக்கட்டாயமாக காணாமலாக்கலை பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்படுகின்றது. 

கடத்தப்பட்டவர்களில் எண்ணற்றவர்கள் கொல்லப்படுதலும் இராணுவத்தின் பின்னணியுடன் இரகசிய இடங்களில் தடுத்து வைக்கப்பட்டு மனிதாபிமானமற்ற முறையில் சித்திரைக்கு உள்ளாக்கப்படும் நிலைமைகள் காணப்படுகின்றன. 

இவ்வாறான நிலையில், காணாமலாக்கப்பட்டவர்களின் குழுவினர், கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில் எமது அன்புக்குரியவர்களை மீட்கும் செயற்பாடு மிகவும் நெருக்கடிக்குள் உள்ளாகியுள்ளது.

எனினும், இந்த மாத இறுதிக்குள் எமக்குரிய பதில் வழங்கப்படாது விட்டால் நாம் ஏப்ரல் 2 ஆம் திகதி முதல் நாடாளவிய ரீதியில் போராடப்போகின்றோம் என்று கூட்டு நடவடிக்கை குழுவின் உறுப்பினர்கள் திடமாக குறிப்பிட்டுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.