கொரோனா தொற்று பாதிப்பை கண்டறிய எளிய பரிசோதனை

0

அறிகுறிகள் இன்றி ஒருவருக்கு கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதை நடை பயிற்சி மூலம் எளிதாக கண்டறியலாம் என மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அதன் தொடக்கநிலை அறிகுறிகளாக கண் சிவந்து போதல், உடல் அரிப்பு, தொடர் வயிற்றுப்போக்கு, நடக்கும் போது மூச்சிரைப்பு, தொண்டை வலி, மூக்கடைப்பு, உடல் சோர்வு, உணவு விழுங்குவதில் சிரமம்… ஆகியவை இருக்கும். இத்தகைய பாதிப்புள்ளவர்கள் உடனடியாக வைத்தியரின் ஆலோசனையுடன் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். 

சிலருக்கு ஆர் டி பி சி ஆர் பரிசோதனையில் பாதிப்பு இல்லை என தெரிந்த பின்னர், நுரையீரலில் தொற்று இருக்கிறதா? இல்லையா? என்பதை கண்டறிய சிடி ஸ்கேன் என்ற பரிசோதனையை செய்து பாதிப்பை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். அதே தருணத்தில் கூட்டம் கூடும் இடங்களுக்கும், கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு செல்வதை முற்றாக தவிர்க்க வேண்டும்.

அறிகுறிகள் ஏதுமின்றி ஒருவருக்கு கொரோனாத் தொற்று பாதிப்பு இருக்கிறதா? இல்லையா? என்பதை கண்டறிய ஆறு நிமிட கால அவகாசத்திற்கு தொடர்ந்து நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அதன் போது மூச்சு திணறல் ஏற்பட்டால்… கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதற்கு வாய்ப்புண்டு.  இவர்கள் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு சென்று பரிசோதனை செய்து, சிகிச்சை பெற வேண்டும். இத்தகைய நடைபயிற்சியை ஒவ்வொரும் தங்களின் இல்லங்களிலும், மொட்டை மாடியிலும் மேற்கொள்ளலாம்.

வேறு சிலர் இத்தகைய நடைபயிற்சியை நாளாந்தம் இரண்டு அல்லது மூன்று முறை மேற்கொண்டு ஓட்சிஜன் அளவை பரிசோதனை செய்து கொள்ளலாம். இதன் மூலம் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதை கண்டறிந்து, சிகிச்சை பெற்று குணமடையலாம்.

டொக்டர் பாலாஜி நாதன்.

தொகுப்பு அனுஷா.

Leave A Reply

Your email address will not be published.